பாற்சோறு சமைத்து வெற்றியை கொண்டாடும் ஆர்ப்பட்டக்காரர்கள்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் பாற்சோறு சமைத்து வெற்றியை கொண்டாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது .
ராஜபக்ச அரசாங்கத்தினால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த நிலையில் அரசாங்கத்திற்க்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள், தொடர் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து, பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சவும் ,நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்க்ஷவும் பதவி விலகி இருந்தனர்.
எனினும் கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகாததால் மக்கள் அரச மாளிகைகை முற்றுகையிட்டதை அடுத்து கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் நேற்று அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
தொடர்ந்து நாட்டின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில், ஆர்ப்பாட்டகாரர்கள் பாற்சோறு சமைத்து வெற்றியை கொண்டாடியுள்ளனர்.


