38 துவிச்சக்கர வண்டியை ஆட்டையப்போட்ட இளைஞன்!
திருடப்பட்ட 38 துவிச்சக்கர வண்டிகளுடன் கம்பஹா, ஒருதொட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என கூறப்படும் நபருக்கு தேவையான பணத்தை பெற்றுக் கொடுப்பதற்காக இந்த துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு கம்பஹா மற்றும் யக்கல பிரதேசங்களில் அடகு வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகநபரின் வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன.
திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பல மோட்டார் சைக்கிள்களின் விலை சுமார் 100,000 ரூபா எனவும் இவற்றில் 21 பைக்குகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.