128 இளைஞர்களை ஏமாற்றிய வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம்; முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு
ருமேனியாவில் வேலை வாய்ப்பை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றிய நிறுவனம் முன்பாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பரப்ரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் நேற்று (12) நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் ஏற்பட்டது. 128 இளைஞர்கள் தலா 7 முதல் 10 இலட்சம் ரூபா வரை பணம் இந்த வேலை வாய்ப்பிற்காக பணம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பெரும் தொகையை இழந்த இளைஞர்கள்
இவர்கள் அனைவரும் நேற்று வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கு முன்பாக திரண்டனர். அங்கு அவர்கள் ஊடகங்ளிடம் கருத்து தெரிவிக்கையில்,
“நான் வாத்துவையில் இருந்து வந்தேன்.. ருமேனியா செல்வதற்காக 7.45 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இதேபோன்று 120 பேர் இங்கே வந்துள்ளனர். நாளை நேர்முகத்தேர்வுக்கான திகதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அழைத்து அனைத்தும் இரத்து செய்யப்பட்டதாக கூறினர். ஒரு பாரிய மோசடி என்றும் குறிப்பிட்டனர். அதேவேளை அண்மைகாலமாக வெளிநாடு செல்லும் ஆசையால் இளைஞர்கள் மோசடி முகவர்களிடம் ஏமாறும் சம்பவங்களும் அதிகத்து வருகின்றது.