அவசரகால சட்டம் என்றால் என்ன?...மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்
இலங்கையில் 1953 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது அவசரகாலச் சட்டம் 25 வீதத்தில் இருந்து 70 வீதமாக உயர்த்தப்படுவதற்கு எதிரான இடதுசாரிகளின் எதிர்ப்பை எதிர்த்து அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு 15 முறைக்கு மேல் இந்த அவசரகால சட்டம் அமுலுக்கு வந்தது. தற்போது நாட்டின் அனைத்து குடிமக்களும் இந்த சட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். நாட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு, விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையைச் சேர்ந்த எவரையும் எந்த நேரத்திலும் கைது செய்யும் அதிகாரம் உள்ளது. கைதான பிறகு விசாரணை என்ற கதைக்கே இடமில்லை.
எந்த வகையிலும் கைது செய்ய அதிகாரம் உள்ளது. இந்த நிலையில் யாரேனும் தப்பி ஓட முயன்றால் சுடுவதற்கு அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஒரு நபரை சந்தேக நபராகக் கருதுவதற்கு முடிவெடுக்கும் அதிகாரம், பணியில் இருக்கும் எந்த ஆயுதமேந்திய பாதுகாப்பு அதிகாரிக்கும் உள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டிய கடமை இலங்கைக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் விசாரணை நடத்த பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அதிகாரம் உள்ளது.
நீண்ட காலமாக விசாரணையின்றி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் வருபவர்கள் இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.