இலங்கையில் நிறுத்தப்படும் எலன் மஸ்க்கின் இணைய சேவை
இலங்கையில் எலோன் மஸ்க்கின் 'Starlink' செய்மதி இணைய சேவையின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பாதுகாப்பு விடயங்கள் உட்பட, அரச நிறுவனங்களின் தொடர்புத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமையை உறுதி செய்வதற்கான பணிகள் முடியும் வரை இந்நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கை
சில தனிநபர்கள் இந்த செயற்கைக்கோள் இணைய சேவையை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம் என அரசாங்கம் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை திணைக்களம், ஸ்டார்லிங்குடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு இலங்கையில் இணையம் வழங்குவதற்கு தேவையான உரிமம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்டு அது தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய சட்டமும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடதக்கது.