முகநூல், இன்ஸ்டாகிராமை கிண்டல் செய்து மீம் ஒன்றை பதிவிட்ட எலான் மஸ்க்!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்த கூடிய மொட்டா நிறுவனத்தில் சமூக வலைதளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் மேசேன்சர் ஆகியவற்றின் சேவை இன்றிரவு 8.30 மணி முதல் 30 நிமிடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டது.
இதனால், தகவல் தொடர்பு கிடைக்காத சூழலில், மக்கள் பரிதவித்து வந்தனர். முகநூல், இன்ஸ்டாகிராம் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிகுள்ளாகினர்.
இவ்வாறான நிலையில் எக்ஸ் வலைதள உரிமையாளரான எலான் மஸ்க், போட்டியாளரான சமூக ஊடக நிறுவனமான மெட்டாவை கிண்டல் செய்து, "நீங்கள் இந்த பதிவினை படிக்கிறீர்கள் என்றால் எங்கள் சேவையகங்கள் செயல்படுவதால் தான்.." என்று தெரிவித்துள்ளார்.
If you’re reading this post, it’s because our servers are working
— Elon Musk (@elonmusk) March 5, 2024
மேலும் முகநூல், இன்ஸ்டாகிராமை கிண்டல் செய்யும் விதமாக மீம் ஒன்றை எலான் மஸ்க் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
we know why you’re all here rn
— X (@X) March 5, 2024