அவுஸ்திரேலியா இளம்பெண்ணிடம் காதலில் விழுந்த எலன் மஸ்க்!
உலகளவில் பிரபல பணக்காரராக உலா வரும் எலன் மஸ்கை [Elon ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓவான எலன் மஸ்க் அவுஸ்திரேலியா நடிகை நடாஷா பஸட்டை காதலித்து வருகிறார்.
50 வயதாகும் எலான் மஸ்க் [Elon 27 வயது நடாஷாவை காதலிப்பது குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
சுமார் 233 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து வைத்திருக்கும் எலன் மஸ்க் தான் தற்போது உலகின் நம்பர் 1 பணக்காரராக திகழ்ந்து வருகிறார். சிலர் எலன் மஸ்கிடம் உள்ள பணத்துக்காக தான் நடாஷா அவரை காதலிப்பதாக கூறி வருகின்றனர்.

ஆனால் இதற்கு நடாஷா மறுப்பு தெரிவித்ததுடன், நான் அவரிடம் கொட்டி கிடைக்கும் பணத்தை பார்த்து காதலிக்கவில்லை. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது புத்திசாலித்தனம்.அது தான் என்னை கவர்ந்தது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் காதலர்களாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது.
சில வருடங்களுக்கு முன்பு இவர் பாடகி ஒருவருடன் லிவிங் முறைப்படி வாழ்ந்து வந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் சில மனக்கசப்பால் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதன்படி எலன் மஸ்கிற்கு தன் முதல் மனைவியான ஜஸ்டின் மூலம் 5 மகன்கள் இருக்கிறார்கள்.
ஐஸ்டினை பிரிந்த பிறகு இங்கிலாந்தை சேர்ந்த நடிகை தலுலா ரைலியை இரண்டு முறை திருமணம் செய்து இரண்டு முறை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.