தடம்புரண்டது எல்ல ஒடிசி புகையிரதம்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்ல ஒடிசி சுற்றுலா ரயில், வட்டகொட ரயில் நிலையம் அருகே இன்று (26) பிற்பகல் தடம் புரண்டதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதில் பின்புற எஞ்சின் கொண்ட ஒரு ரயில் பெட்டி தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரயில் சேவைகள்
வட்டகொட ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது ரயில் தடம் புரண்டுள்ளது மேலும் அதை சரி செய்ய கண்டி ரயில் நிலையத்திலிருந்து ரயில்வே பேரிடர் பணியாளர்கள் குழு வர உள்ளது என்று நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மலையக மார்க்கத்திலான ஏனைய ரயில் சேவைகளுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை எனவும் எல்ல ஒடிசி ரயிலில் பயணித்த பயணிகள் மற்றொரு ரயிலுக்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர் .