முடிந்தால் இந்த வாரமே ஒழித்துக்கட்டவேண்டும்!
முடிந்தால் இந்த வாரமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் வீதிகளில் கேட்கின்ற குரல்களை தவிர நாடாளுமன்றத்தில் வேறு எந்த குரல்களும் ஒலிக்ககூடாது என தெரிவித்த சஜித், மக்கள் அரசாங்கத்தில் மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர் என்பதனை நாடாளுமன்றம் புரிந்துகொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதற்கான யோசனையை இந்த வாரமே நாடாளுமன்றத்தில் கொண்டுவரவேண்டும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், நாங்கள் எந்த அமைச்சு பதவிகளையும் ஏற்கப்போவதில்லை மக்களின் ஆசீர்வாதத்துடனேயே அனைத்தையும் ஏற்போம் என் தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர் பதவிகளிற்காக வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் , 113 பெரும்பான்மையை பெறுவதற்காக இரகசிய உடன்படிக்கைகளில் ஈடுபடாதீர்கள் எனவும் சஜித் பிரேமதாக இதன்போது தெரிவித்தார்.