காத்தான்குடியில் வயதான தாயை ஏமாற்றிய தேர்தல் அதிகாரி; சின்னத்தை மாற்றி வாக்களிப்பு!
காத்தான்குடி “ஹிஸ்புல்லாஹ்” பாலர் பாடசாலை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் இன்று காலை வயதான தாய் ஒருவர் வாக்களிக்க சென்று அதிகாரி ஒருவரிடன் உதவி கோரியுள்ளார்.
அங்கு அவர் “மரம்” சின்னத்திற்கு வாக்களித்து தருமாறு உதவி கோரியபோது அங்கிருந்த தேர்தல் பணி அதிகாரி ஒருவர் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து கொடுத்துள்ளார்.
புள்ளடியிட்ட உத்தியோகத்தர் பணிநீக்கம்
இதன்போது தேர்தல் அதிகாரி தனது கோரிக்கைக்கு மாறு செய்வதை அவதானித்த அந்த தாய் உடனடியாக அங்கிருந்த ஏனைய அதிகாரிகளுக்கு அதனை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து மோசடி செய்த தமிழ் அதிகாரியை பொலிசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, அந்த வாக்குச்சாவடிக்கு மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் சென்று உடனடியாக அந்த உத்தியோகத்தரை கடமையில் இருந்து நீக்கி, அவரை தேர்தல் திணைக்களத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதுடன், மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டு உரிய முறையில் அப்பெண்ணின் வாக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.