கண் வைத்தியசாலைக்கு சென்ற வயோதிப பெண்களுக்கு இப்படி ஒரு அவலம்!
கொழும்பு கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற சகோதரிகளாகிய வயோதிபப் பெண்கள் இருவரை நபர் ஒருவர் ஏமாற்றி , அவர்களின் காதணிகளை கொள்ளையடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதோடு அவர்களின் காதணிகளிற்கு பதிலாக, காகிதத்தில் கற்களை சுற்றி கொடுத்த நிலையில், சம்பவம் குறித்ட்க்ஹு பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாதுக்க பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான ஹேமலதா மற்றும் பிரேமாவதி ஆகியோர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, கொழும்பு கண் வைத்திசாலைக்கு சென்றுள்ளனர். இதன்போது, அவர்களுடன் அறிமுகமான ஒருவன், தனக்குத் தெரிந்த கண் நிபுணரிடம் அவர்களை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளான்.
அவர் எங்களை ஒரு கண் நிபுணரிடம் அறிமுகப்படுத்தி, எங்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க சிகிச்சை பெற ஏற்பாடு செய்வதாக கூறினார். நாங்கள் ஏழைகள் என்பதை நிரூபிப்பதற்காக எங்கள் காதணிகளைக் கழற்றுமாறும் அந்நபர் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து காதணிகளை வாங்கி, காகிதமொன்றில் சுற்றி வைத்துக் கொண்டார். பின்னர் அவற்றை எம்மிடம் தந்தார். கைக்குட்டையில் சுற்றி வைத்துக் கொண்டோம். பின்னர் பிரித்துப் பார்த்த போதுதான் அவை கற்கள் என்பதை தெரிந்து கொண்டோம் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அங்கிருந்த பொலிஸார், தங்கள் எல்லைக்கு வெளியே இந்த சம்பவம் நடந்ததாக கூறி புகாரை எழுத மறுத்துவிட்டார்.
அதன் பின்னர் மருதானை பொலிஸ் நிலையத்தில் தங்களது முறைப்பாட்டை பதுவு செய்ததாக கூறும் அவர்கள், நாங்கள் ஆதரவற்றவர்கள், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.