கொழும்பு பேருந்தில் யுவதியிடம் சில்மிசம் செய்த தாத்தா; பொறி கலங்க "பளார்" என விட்ட பெண்!
கொழும்பு பேருந்தில் இளம் பெண்ணிடம் அங்க சேட்டை செய்த தாத்தாவுக்கு, பளார் என யுவதி கொடுத்த தர்ம அடி பேசுபொருளாகியுள்ளது.
கல்கிசையிலிருந்து கொழும்பு பல்கலைக்கழகத்தை நோக்கி வந்துகொண்டிருந்த அந்தப் பேருந்தில், இளம் பெண் ஒருவர் பயணச்சீட்டுப் பெற்றுக் கொண்டிருந்த சமயம் , வெள்ளவத்தைப் பகுதியில் ஒரு வயதான ஆசாமி பேருந்தில் ஏறியுள்ளார்.

பளார் பளார் என அடுத்தடுத்து இரண்டு அறை
பயணிகளின் நெரிசலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அந்த முதியவர், மெதுவாக யுவதியிடம் சில்மிசம் செய்ய தொடங்கியுள்ளார். முதியவர் தானே என்று பொறுத்துப் பார்த்த யுவதி , பேருந்து பம்பலப்பிட்டியை நெருங்கியதும், பொறுமை இழந்து முதிய்வரை எச்சரித்துள்ளார்.
அந்த ஆசாமி, பெண்ணின் எச்சரிக்கையைக் காதில் வாங்காது நெரிசலைப் பயன்படுத்தி மீண்டும் தனது சில்மிஷங்களைத் தொடர்ந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் எரிச்சலின் உச்சத்துக்கே சென்ற யுவதி , பேருந்துக்குள் இருந்த பயணிகள் அனைவருக்கும் கேட்கும் வகையில் சத்தமிட்டு, ஆசாமியைக் கிழித்துத் தொங்கவிட்டார்.
அடங்காத முதிய்வர் சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் தனது லீலைகளை அரங்கேற்றத் தொடங்கியுள்ளார்.
பொறுமை இழந்த யுவதி, பேருந்து கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றதும், இறங்க முன்பு , சற்றும் எதிர்பாராத விதமாகத் தனது இடது கையால் அந்த முதியவரின் முகத்தில் ‘பளார் பளார்’ என அடுத்தடுத்து இரண்டு அறைகளைக் கொடுத்து முகத்தில் எச்சிலையும் துப்பிவிட்டு பேருந்திலிருந்து இறங்கிச் சென்றுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஷாக்காகி நின்றனர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த பேருந்து நடத்துனரும் முதியவரைப் பயணிகளுக்கு முன்னிலையில் வெளுத்து வாங்கியதுடன், அங்கேயே அவரைப் பலாத்காரமாகப் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்க்களில் பேசுபொருளாகியுள்ளதுடன், பெண்காளிடம் பேருந்தி அத்து மீறுபவர்களுக்கு இது சரியான பாடம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.