கிளிநொச்சியில் வயோதிப தம்பதிகளை கட்டிவைத்து கொள்ளை!
கிளிநொச்சியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் 75 வயதான வீட்டு உரிமையாளரைத் தாக்கி 31 லட்ச ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
மூன்று பேரைக் கொண்ட இந்த கொள்ளையர் குழு, இனங்காண முடியாதவாறு முகமூடி அணிந்து வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் 75 வயதான வீட்டு உரிமையாளரும் 70 வயதான அவரது மனைவியும் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
கொழும்பில் பிள்ளைகள்
அவர்களது பிள்ளைகள் மூவரும் கொழும்பில் வசிப்பதாகவும் அவர்கள் வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர் எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் வீட்டுக்குள நுழைந்த கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளரை கட்டி வைத்துவிட்டு மனைவி அணிந்திருந்த நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்.
அதோடு அவர் மூலம் பணம் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு இரண்டு லட்ச ரூபா பணத்தையும் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளையும் அக்கோஷ்டியினர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.