ஏழரை நாட்டு சனி பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
ஜோதிடத்தில், சனி பகவான் நீதியை வழங்கும் கிரகத்தின் அந்தஸ்தை பெற்றுள்ளது. சனீஸ்வரன் கெட்ட செயல்களை செய்பவர்களுக்கு தண்டனை வழங்குகிறார். மேலும், ஒன்பது கிரகங்களில், ஏழரை நாட்டு சனி மற்றும் அஷ்டம் சனி போன்றவற்றை சனி பானின் பெயர்ச்சி தீர்மானிக்கிறது.
ஒன்பது கிரகங்களில், மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், இரண்டரை ஆண்டுகளில் சனி தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். 2025ம் ஆண்டு மார்ச் 29ம் திகதி சனி கும்பத்தில் இருந்து விலகி மீன ராசிக்குள் நுழைகிறார்
சனி பெயர்ச்சி காரணமாக மீன ராசிக்கு ஜென்ம சனி காலம் தொடங்கும். அதாவது இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஏழரை சனி காலம் நீடிக்கும். கும்ப ராசியினருக்கு பாத சனி காலம் தொடங்கும். அதாவது இன்னும் 2 1/2 ஆண்டு காலத்திற்கு ஏழரை சனி பாதிப்பு இருக்கும். மேஷ ராசியினருக்கு விரய சனி காலம் தொடங்கும். அதாவது இன்னும் 7 1/2 ஆண்டு காலத்திற்கு ஏழரை சனி பாதிப்பு இருக்கும்.
மேஷ ராசி
சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டமான விரய சனி காலம் தொடங்குகிறது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதிக்கும். எதிர்கால பிரச்னைகளுக்கு இப்போதே தயாராக இருப்பதால், சவால்களை சமாளிக்கலாம். பண விரயம் அதிகம் ஏற்படும். செலவுகளில் கவனம் தேவை.
கும்ப ராசி
2025 சனி பெயர்ச்சி காரணமாக, கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி கால கட்டமான பாத சனி காலம் தொடங்கும். பாத சனியால் கும்ப ராசியினருக்கு பண விரயம், பணப்பிரச்னை, மன உளைச்சல் ஆகிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். கடின உழைப்பிற்கு, உரிய அங்கிகாரம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கும். இதனால் முன்னேற்றம் தடைபடும்.
மீன ராசி
சனி தனது ராசியை மாற்றி மீன ராசியில் பிரவேசிக்கும் நிலையில் மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் ஜென்ம சனியான இரண்டாம் கட்டம் தொடங்கும். இது மிகவும் வேதனை அளிக்கும் காலமாக இருக்கும். பணக் கஷ்டம், மன கஷ்டம் என எல்லா விதத்திலும் பிரச்சனைகள் சூழும். இந்த காலகட்டத்தில் பொறுமையுடன் செயல்படவும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். கவனமாக வாகனத்தை ஓட்டவும்.