மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்ட எட்டு பேர் கைது
கொட்டாவ - ஹொரண 280 பேருந்து வழித்தடத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்ற எட்டு மோட்டார் சைக்கிள்களுடன் எட்டு சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தேகொட, பிரம்மநாகம, கலல்கொட, ருக்மல்கம, பத்தரமுல்லை மற்றும் ஹிரிபிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
119 அவசர எண்ணின் மூலம், அதிக சத்தம் எழுப்பி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது போட்டியில் பங்கேற்ற எட்டு மோட்டார் சைக்கிள்கள் தடுத்து நிறுத்தி குறித்த 8 சாரதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.