சவால்களை சாதனைகளாக்கிய ஈழத்தின் திருநங்கை தனுஜாவின் பயணமும் போராட்டமும்! (Video)

Sri Lankan Tamils Tamil nadu Germany Transgender
By Sulokshi Aug 19, 2022 10:54 AM GMT
Report

  இலங்கையில் இருந்து அகதிகளாக குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து தற்போது ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஈழத்து திருநங்கை தனுஜா. எழுத்தாளர், பல் சுகாதார மருத்துவர் என இவருக்குப் பல முகம் உண்டு.

தன்னைப்பற்றி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ,

சின்ன வயதிலிருந்தே சின்ன, சின்ன விஷயங்களை ரசிக்கத் தொடங்கினேன். அதுதான் வாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. இன்றைய நிம்மதியைக்கூட அதுதான் கொடுத்துச்சு. பெரும்பாலும் திருநங்கைகள் குடும்பச் சூழலில் இருந்து வெளியே வருகிறதனால அவங்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் ரொம்ப கஷ்டமா இருக்கும்.


சவால்களை சாதனைகளாக்கிய  ஈழத்தின்  திருநங்கை தனுஜாவின்  பயணமும் போராட்டமும்! (Video) | Eelam S Transgender Tanuja S Journey And Struggle

ஆனா, எனக்கு அந்தச் சூழல் இல்லை. ஏன்னா புலம்பெயர்ந்த தமிழர்கள் என்பதால் எங்க குடும்பத்தில் எப்போதும் ஒருத்தர் மிஸ் ஆகிட்டேதான் இருப்பாங்க. நான் வளரும்போது அப்பா இல்லாம அம்மாவின் வளர்ப்பில் மட்டுமே வளர்ந்தேன்.

எப்பவும் குடும்பம் என்கிற அமைப்பில் இல்லாததனால் என் முடிவை நான் எடுக்க அது ரொம்ப வசதியாக இருந்தது.

திருநங்கையாக மாறுவதில் உளவியல் சார்ந்த மிகப் பெரிய சிக்கல்

பலரும் திருநங்கையாக சர்வ சாதாரணமா மாறிட்டதாக நினைக்கிறாங்க. உண்மையில் அப்படியில்லை. அதுல உளவியல் சார்ந்த மிகப் பெரிய சிக்கல் இருக்கு. அந்தச் சமயத்தில் படிப்பையும், உளவியல் சிக்கல்களையும் பேலன்ஸ் பண்ண வேண்டிய சிக்கல் எனக்கும் இருந்தது.

சமுதாயம், குடும்பம்னு நாம யார்மீது அதிகமா அன்பு வைக்கிறோமோ அவங்களே நம்மளைப் புரிஞ்சிக்கல என்பதில் தொடங்கி எல்லாமே சிக்கலாக இருந்தது. அதனால, என் படிப்பையும் தொடர முடியாமப்போச்சு.

வாழ்க்கையில் அந்த சிக்கலில்தான் முதன்முறையாக தற்கொலைக்கு முயன்று மீண்டு வந்தேன்.

சவால்களை சாதனைகளாக்கிய  ஈழத்தின்  திருநங்கை தனுஜாவின்  பயணமும் போராட்டமும்! (Video) | Eelam S Transgender Tanuja S Journey And Struggle

நீ என்னைப் பார்த்து திமிரா பேசுறீயா

பிறகு வாழ்க்கையில் எந்த வித நோக்கமும் இல்லாமப் பயணப்பட ஆரம்பிச்சேன். காதல் எல்லாருக்கும் வர்ற ஒன்றுதான். அதுல எந்தத் தவறும் இல்லை. காதல்தான் நாம வாழுறதுக்கான அர்த்தத்தைக் கொடுக்கும். அப்படி எனக்கும் சிகிச்சைக்குப் பிறகு ஒரு காதலன் வந்தான்.

அவனுடன் என் வாழ்க்கை ஆரம்பிச்சது. இவன்தான் மருமகன்னு என் வீட்டில் எல்லாரும் அவனைக் கொண்டாடினாங்க. ஒருநாள் நீ போலியான ஆள்னு சொன்னான். ஒவ்வொரு நாளும் எந்த உறுப்போடு இருந்தாரோ அந்த உறுப்பே போலின்னு சொன்னான். நீ போலியானவள், நீ என்னைப் பார்த்து திமிரா பேசுறீயான்னு சொல்லி என்னைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போனான்.

சவால்களை சாதனைகளாக்கிய  ஈழத்தின்  திருநங்கை தனுஜாவின்  பயணமும் போராட்டமும்! (Video) | Eelam S Transgender Tanuja S Journey And Struggle

என் அம்மா இன்னைக்கு வரைக்கும் என் கையால மீன் குழம்பும், புட்டும் சாப்பிட்டுட்டுப் போயிட்டு என் பிள்ளையை மருத்துவமனையில் படுக்க வச்சிட்டானேன்னு சொல்லுவாங்க.

அந்தச் சமயம் பல சிக்கல்கள் இருந்தது. அதனுடைய வெளிப்பாடாக இரண்டாவது முறையா தற்கொலை முயற்சி செய்து அதிலிருந்தும் மீண்டு வந்தேன். என்னைக் காதலிச்ச பலரும் என்னைப் தவறான நோக்கத்துடன் தான் பயன்படுத்தினாங்க. நம்மை யாரும் ஏத்துக்காதப்ப ஒரு ஆண் ஏத்துக்கிறான் எனும்போதே அவனுக்கு நாம அடிமைதான்.

அவனுடைய உடல் தேவையைப் பூர்த்தி செய்கிற அடிமையாகத்தான் நாம வாழுறோம். காதலன்கிட்டகூட நோ சொல்ல முடியாது.. ஆனா, வாடிக்கையாளர்களிடம் நோ சொல்ல முடியும். அதனால தவறான தொழில் செய்து சம்பாதித்தேன்.

சவால்களை சாதனைகளாக்கிய  ஈழத்தின்  திருநங்கை தனுஜாவின்  பயணமும் போராட்டமும்! (Video) | Eelam S Transgender Tanuja S Journey And Struggle

 படிக்க ஆசை

ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வாழ்க்கையிலிருந்தும் வெளி வந்தேன். படிக்க ஆசைப்பட்டு என் 27 வயதில் படிக்க ஆரம்பிச்சேன். அப்ப தான் என் சுயசரிதையை எழுதினேன். இந்தச் சமுதாயம் கொடுத்த கஷ்டத்தை எழுத்தின் மூலமா கேள்வி கேட்டப்ப மனதுக்கு நிறைவாக இருந்தது.

ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும் என்கிற என் சுயசரிதைப் புத்தகத்தை எனது 29ஆவது வயதில் வெளியிட்டேன். இப்போது நான் ஆசைப்பட்ட மாதிரியே பல் சுகாதார மருத்துவராகிட்டேன். என் அடுத்த இலக்கு இப்ப தனியா ஒரு கிளினிக் வைக்கணும் என்பதுதான் என கூறினார் திருநங்கை தனுஜா.    

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US