பச்சை நிறமே... பச்சை நிறமே.... புடவையில் ஜொலித்த ஈழத்துப்பெண் பிக்பாஸ் மதுமிதா!
பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தை தாண்டி உலகவாழ் தமிழர்களையும் ஈர்ந்த்துள்ளது. அதல் இலங்கை தமிழர்களும் உள்ளடக்கம். ஏனெனில் நிகழ்ச்சியில் இலங்கை தமிழர்களும் பங்குபற்றுவதே காரணம்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் மற்றும் தர்சன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் பிரபல்யம் அடைந்திருந்தனர்.
அதன்படி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இலங்கையை பின்புலமாககொண்ட ஜேர்மன் வாழ் மதுமிதா கலந்துகொண்டிருந்தார். பிக்பாஸ் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ள மதுமிதா ஒரு மாடல் ஆவார் . பிக்பாஸ் வீட்டில் தனது செல்ல தமிழில் பேசுவது மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த அவர் கடந்தவாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பச்சை நிற புடவையில் ஜொலித்த பிக்பாஸ் மதுமிதாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

