எரிபொருள் நிரப்பு நிலையம் மீது கல்வீச்சு; காத்திருந்த மக்கள் கடும் கோபம்
கல்கமுவ கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையம் மீது பொதுமக்கள் கற்களால் தாக்குதல் நடத்திய நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருளுக்காக அதிக நேரம் வரிசையில் காத்திருந்த போதும் எரிபொருள் தீர்ந்து விட்டதாக அதன் ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு சிறிதளவு எரிபொருள் மட்டுமே மீதம் உள்ளதாக நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். எனினும் வரிசையில் நின்றவர்கள் மீதமுள்ள அனைத்து எரிபொருளையும் தமக்கு தருமாறு கேட்டுள்ளனர்.
எனினும் ஊழியர்கள் வழங்காத காரணத்தால் கடும் கோபமடைந்த மக்கள், எரிபொருள் நிரப்பு நிலையம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரச்சென்ற பொலிஸார், இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 6 பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.