பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான நாடாளுமன்றக் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குழுவில் அங்கம் வகிக்கும் வகையில் தெரிவுக்குழுவினால் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abey) இன்று (21-02-2023) சபைக்கு அறிவித்தார்.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 123 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி குறித்த குழுவிற்கு, கௌரவ. (செல்வி) பவித்ராதேவி வன்னியாராச்சி, கௌரவ. ஹரின் பெர்னாண்டோ, கௌரவ. ஜீவன் தொண்டமான், கௌரவ. ஷெஹான் சேமசிங்க, கௌரவ. தாரக பாலசூரிய, கௌரவ. சி.பி.ரத்நாயக்க, கௌரவ. விமல் வீரவன்ச, கௌரவ. நாமல் ராஜபக்ஷ, கௌரவ. (டாக்டர்.) நாலக கொடஹேவா, கௌரவ. (டாக்டர்.) (செல்வி) சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கௌரவ. ஜே. சி. அலவத்துவல, கௌரவ. சிவஞானம் ஸ்ரீதரன், கௌரவ. ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ. அகிலா எல்லாவல, கௌரவ. வருண லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.