காலியான கஜானா: நடுத்தெருவுக்கு வந்த இலங்கை மக்கள்!
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி பாரிய பிரச்சனை எதிர்கொண்டு வருகின்றது. எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தும் பல மடங்கு விலை அதிகரித்து விட்டது. இதனால் பாண் தயாரிக்க முடியாமல் பேக்கரி உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டு விட்டன.
ஓட்டல்கள் நடத்த முடியாமல் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. மருந்துகளும் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். இது போதாதென்று நாளாந்தம் பல மணி நேரம் மின் வெட்டு.
தங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவசர நிலை, ஊரடங்கு விதித்தும் கண்ணீர் புகை குண்டு, தடியடிக்கும் பயப்படாமல் மக்கள் தொடர்ந்து நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்ப்புகளை அடக்குவதற்கு போராடி வரும் இலங்கையின் ஜனாதிபதி ஆளும் கூட்டணியில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் வெளியேறியதை அடுத்து, அவசரகால நிலையை ரத்து செய்துள்ளார்.
நிர்வாகத்திற்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவாக பதிவியேற்றி 24 மணி நேரத்தில் நிதியமைச்சர் அலி சப்ரி தனது பதிவயை இராஜினாமா செய்துள்ளார்.
கடன் சுமை நிறைந்த பொருளாதாரத்தை ஆளும்கையாள்வதில் பொது அமைதியின்மை அதிகரித்ததால், கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசு திங்களன்று தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு தேசிய அரசாங்கத்தை அமைக்க முயன்றார்.
மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை இருப்பதாக சுகாதார அமைச்சு சீர்குழையும் நிலையில் இருப்பதாக வைத்தியர் அமைப்பு அரசாங்கத்திடம் கூறியுள்ளது.
தற்போதைய நிலையில், அரசியல் ரீதியாக, சாத்தியமான அடுத்த படிகளில், மகிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக புதிய பிரதமரை நியமிப்பது அல்லது முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், என்ன திட்டமிடப்பட்டுள்ளது என்பதற்கான உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அரசியல் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்தனர்.
225 உறுப்பினர்களை கொண்ட சபையில் பெரும்பான்மையை தக்கவைக்க தேவையான 113 உறுப்பினர்களை விட குறைவான உறுப்பினர்களை ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு விட்டுவிட்டு அவர்கள் இப்போது சுயேச்சை உறுப்பினர்களாகிவிட்டனர்.
ராஜபக்ஷவின் சிறுபான்மை அரசாங்கம் முடிவெடுப்பது மிகவும் சவாலானதாக இருந்தாலும், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையில் அரசாங்க முன்மொழிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க முடியும்.
மூடப்பட்ட வெளிநாட்டு தூதுரகங்கள் நிதிப் பற்றாக்குறையின் அறிகுறியாக, ஏப்ரல் 30 முதல் ஒஸ்லோ மற்றும் பாக்தாத்தில் உள்ள அதன் தூதரகங்களையும், சிட்னியில் உள்ள துணைத் தூதரகத்தையும் தற்காலிகமாக மூடுவதாக இலங்கை அறிவித்தது.
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு நாணயக் தட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையின் இராஜதந்திர பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நாடு முழுவதும் 16,000க்கும் மேற்பட்ட வைத்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், உயிர்காக்கும் மருந்துகள் உட்பட மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகளின் தொடர்ச்சியான மற்றும் போதுமான விநியோகத்தை உறுதி செய்யத் தவறினால், ஒட்டுமொத்த சுகாதார அமைப்பின் சரிவுக்கு வழிவகுக்கும் என்று அந்த அமைப்பு சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.
இது ஏற்கனவே நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள குடிமக்களுக்கு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும். என அந்த அமைப்பு சுட்டிகாட்டியுள்ளது. பங்குகள் உயர்வு கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குச் சுட்டெண் (CSE) சுமார் 6% உயர்ந்தது.
இலங்கையின் நிதிக் குழப்பத்தைத் தீர்ப்பதற்கான தெளிவான திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேன (Maithripala Sirisena) அழைப்பு விடுத்தார்.
22 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் எதிர்ப்புகளின் மனநிலையை பிரதிபலிக்கிறது. ஆகையினால் இரண்டு சகோதரர்களையும் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியையும் எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
மக்கள் விரும்புவது இந்த ஜனாதிபதியும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே ஆகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.