சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனைகளா ; நீரிழிவு வரை செல்லும் ஆபத்து
நிறைய பேருக்கு இரவு உணவு உண்டபின் உடனடியாக தூங்கச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் தவறானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அப்படி படுக்கும்போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

காத்திருக்கும் ஆபத்து
சாப்பிட்ட உடனே தூங்கச் செல்லவதால் புவியீர்ப்பு விசையின் காரணமாக வயிற்றுப் பகுதியில் உள்ள அமிலங்கள் தொண்டைப் பகுதியை நோக்கி மேல் நோக்கி வரக்கூடும். இது கடுமையான நெஞ்சு எரிச்சல், உணவு செரிமானம் தாமதமாவதால் வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் குடலில் அசௌகரியம் ஏற்படும்.
உணவில் உள்ள கலோரிகள் சரியாக எரியாமல் கொழுப்பாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை அதிகரிக்கும்.
வயிறு முட்டல் காரணமாக ஆழ்ந்த தூக்கம் பாதிக்கப்படும்.. இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம்.
எனவே இரவு உணவை சாப்பிட்டவுடன் படுக்காமல் சிறிது நேரம் அமர்ந்திருப்பது அல்லது மெதுவாக நடப்பது உடலுக்கு நல்லது.
முக்கியமாக இரவு உணவிற்கும், தூக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி இருப்பது மிகவும் நல்லது.