பாகற்காய் உண்பதால் தீமை ஏற்படுமா! மக்களுக்கான அவதானம்
பாகற்காய் மிகவும் கசப்பானது ஆனால் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி பாகற்காயை ஏதோ ஒரு வடிவில் எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
அதுமட்டுமல்ல பாகற்காய் ஆரோக்கியமான இதயத்தை கொடுக்கும்.
அளவிற்கு அதிகமான பாகற்காய்
பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
பாகற்காயை தினமும் உட்கொள்வது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
கல்லீரல் பாதிப்பு
நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
ஆனால் பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம்.
இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மறுபுறம் கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், பாகற்காய் சாப்பிடக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள்
பாகற்காயை அல்லது பாகற்காய் சாற்றை அளவிற்கு அதிகம் உட்கொள்வதால் மாதவிடாய் சுழற்சி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் கர்ப்ப காலத்தில் பாகற்காய் அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடும் எனவே கர்ப்பிணிகள் பாகற்காய் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குறைந்த சர்க்கரை அளவு உள்ள நோயாளிகள்
பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது. இது சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.