அடிவயிற்று கொழுப்பை விரட்டும் ஈசி வழிகள்!
தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என பலரும் அடிவயிற்று கொழுப்பால் அவதிப்பட்டு வருகின்றது. அவர்களின் உணவுப்பழக்கமே உடலில் அதிக கொழுப்பு தங்குவதற்கு காரணம் என சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் இடை உணவுகள், துரித உணவுகள் என்பனவே கொழுப்பௌகூட காரணமாகின்றது. சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இயற்கையான வழிகள்
உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.
கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன.
கிராம்பு, பச்சை பூண்டு ,இஞ்சி
சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது.
அதேவேளை காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. ஆனால் அவ்வாரு பட்டினி இருபதவர்களுக்கு இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது.
இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது.