கிழக்கு ஆளுநர் - அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு !
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (06) கொழும்பில் இடம்பெற்றது.
கலந்துரையாடலின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்தார்.
அத்துடன் அது தொடர்பான கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் முன்வைத்தார்.
இந்நிலையில் ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதற்கு சாதகமான பதிலையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.