இலங்கையில் முக்கிய இடங்களில் பதிவான நில அதிர்வுகள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட இரண்டு பாரிய நில அதிர்வுகளை அடுத்து, இலங்கையின் சில இடங்களில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து இலங்கையில் நில அதிர்வுகள் ஏற்படக்கூடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக மொனராகலையில் நில அதிர்வு ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கின்ற மக்கள், நில அதிர்வு ஒன்றினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நிலை தொடர்பில் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நில அதிர்வு ஒன்று முன்னறிவித்தல் எதுவும் இல்லாமலேயே ஏற்படும் என்பதால், அதுதொடர்பில் அவதானமாக இருந்தால், பாரிய இழப்புகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நில அதிர்வு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.