நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை ; 3 இலட்சம் பேர் பலியாகலாம்
ஜப்பான் அரசாங்கம் அதன் பசுபிக் கடற்கரையில் 9 மெக்னிடியூட் அளவிற்கு பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
அவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டால் பேரழிவு தரும் ஆழிப்பேரலையும் ஏற்படும் எனவும் ஜப்பான் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் கட்டடங்கள் இடிந்து விழும், சுமார் 3,00,000 பேர் உயிரிழக்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1.81 டிரில்லியன் டொலர் பொருளாதார இழப்புகள்
அந்த நில அதிர்வு ஏற்படுமாயின் 1.81 டிரில்லியன் டொலர் பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும் என்றும், இது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்டப் பாதி என்றும் மதிப்பிடப்படுகிறது.
அதேவேளை அடுத்த நூற்றாண்டில் இந்த பிராந்தியத்தில் 8 முதல் 9 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்படுவதற்கு 80 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
திருத்தப்பட்ட பேரழிவு தாக்க மதிப்பீடுகள் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிலப்பரப்பு தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ஜப்பான் அரசாங்கம் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த அறிக்கையின்படி குளிர்கால இரவுகளில் நில அதிர்வு ஏற்பட்டால், ஆழிப்பேரலை மற்றும் கட்டமைப்பு இடிபாடுகளால் 2,98,000 பேர் வரை உயிரிழக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சுமார் 1.23 மில்லியன் மக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அழுத்தம் காரணமாக, 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நில அதிர்வு ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், 2011 ஆம் ஆண்டில், 9 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வால் ஆழிப்பேரலை ஏற்பட்டது.