இந்தியாவில் நிலநடுக்கம்; அச்சத்தில் பொதுமக்கள்!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில் இன்று இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை சரியாக 4.18 மணிக்கு அசாம் மாநிலம் நாகோனில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
நாகோனில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை மத்திய அரசின் நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து மத்திய அரசின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், ‛‛இன்று மாலை 4.18 மணிக்கு அசாமின் நாகோனில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 என்ற அளவில் அதிர்வுகள் பதிவாகி உள்ளது” என கூறப்பட்டுள்ளது.