இன்று அதிகாலையில் பயங்கரம்; தப்பிய NPP சட்டத்தரணி
வெலிகம - உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினரான சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை
பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பை பெற்றிருந்த போதே குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து சந்தேகநபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேவே:ளை தமக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சட்டத்தரணி இதற்கு முன்னர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தி இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.