யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தோண்டியவர்களுக்கு நேர்ந்த கதி!
மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தின் போது புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்காக எடுப்பதற்காக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் யுத்த காலத்தின் போது புதையுண்ட தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மன்னார் பொலிஸார் மன்னார் இராணுவ முகாம் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் பயணித்த வாகனமும், அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 60 வயதுடைய ஹெட்டிமுல்ல, கொடியாக்கும்பு, பாணந்துறை, பொரலந்த மற்றும் ஹல்பே ஆகிய பகுதிகளைச சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் இன்றைய தினம் மன்னார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.