மரதன் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற வாத்து; எங்கு தெரியுமா?
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 50வது முறையாக நடைபெற்ற மரதன் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற வாத்து ஒன்று, பார்வையாளர்களின் மனங்களை வென்றுள்ளது. நியூயோர்க் நகரில் கடந்த 7ஆம் திகதி மரதன் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.
ரிங்கிள் (Wrinkle) என்று பெயரிடப்பட்டுள்ள வாத்தும் மரதன் பந்தயத்தில் பங்கேற்றது. ஓட்டப்பந்தயத்தில் சிவப்பு காலணியொன்றையும் அணிந்து கொண்டு, ரிங்கிள் மரதன் ஓடும் வீடியோ வைரலாகியுள்ளது.
ரிங்கிள் மரதன் பந்தயத்தில் பங்கேற்பதன் முன்பாக, புகையிரதத்தில் பயணம் செய்துள்ளதுடன் கலைக் கண்காட்சிக்குச் சென்றுள்ளது.
அதோடு ரிங்கிளுக்கு (Wrinkle) அதற்கென தனி இன்ஸ்டகிராம் பக்கமே உள்ளது. எனினும், 42 கிலோமீட்டர் நீளமான இந்த மரதன் பந்தயத்தில், ரிங்கிள் முழுமையாக ஓடியிருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.


