மது போதையில் காரை செலுத்திய சாரதி கோர விபத்தில் பலி
குளியாப்பிட்டிய - மாதம்பே வீதியில் பலுகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (09) நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 மீற்றர் தூரத்துக்கு இலுத்திச் செல்லப்பட்டு அருகிலிருந்த வீடொன்றின் இரும்பு நுழைவாயில் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி பின்னர் மற்றுமொரு வீட்டின் கிணற்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த காரின் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது காரின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.