தலைமுடி வளர்ச்சிக்கு முருங்கை இலையை இவ்வாறு பயன்படுத்தி பாருங்க...
இன்றைய காலகட்டத்தை பொருத்த வரையில் முடி உதிர்வு என்பது ஆண் பெண் என எல்லோருக்கும் ஒரு பெரிய பிரச்சிணையாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில் முருங்கை இலையில் இருந்து தயாரிக்கப்படும் முருங்கை எண்ணெயானது அழகு மற்றும் நலன் சார்ந்த தொழில் துறைகளில் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த எண்ணெயில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் வலிமையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்திருப்பதால் இது தலைமுடி பராமரிப்பிற்கு ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது.
பல்வேறு நன்மைகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், பொதுவான சில தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கவும் இது உதவுகிறது. உங்களுடைய தலைமுடிக்கு பளபளப்பை சேர்ப்பது முதல் தலைமுடியின் வளர்ச்சி, வலிமையை அதிகரிப்பதற்கு முருங்கை எண்ணெய் என்பது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
முருங்கை எண்ணெய் பயன்பாடு
முருங்கை எண்ணெயானது நேரடியாக தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பது கிடையாது. மாறாக இது ஆரோக்கியமான மயிர் கால்கள் பெறுவதற்கு உதவுவதன் மூலமாகவும், ஒட்டுமொத்த தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
இந்த எண்ணெயில் வைட்டமின்கள் A, C மற்றும் E போன்ற ஆரோக்கியமான தலைமுடிக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதோடு முருங்கை எண்ணெயில் உள்ள அமினோ அமிலங்களும், ஆன்டி-ஆக்சிடன்ட்களும் மயிர் கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அவற்றை வலிமையாக்குகிறது.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இணைந்து மயிர் கால்களுக்கு தேவையான போஷாக்கை வழங்கி ஆரோக்கியமான தலைமுடியை ஊக்குவிக்கிறது.
முருங்கை எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தலைமுடியை வலிமையாக்கி, தலைமுடி உடைவதை குறைக்கிறது.
ஈரப்பதத்தை தக்க வைப்பதன் மூலமாக தலைமுடி வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.
வீக்க எதிர்ப்பு பண்புகள் கொண்டிருப்பதால் மயிர் கால்களை ஆற்றி, தலைமுடி வளர்வதற்கு ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்குகிறது.
முதலில் முருங்கை எண்ணெயை உங்களுடைய மயிர் கால்கள் மற்றும் தலைமுடியில் நேரடியாக தடவி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு லேசாக மசாஜ் செய்யுங்கள்.
30 நிமிடங்கள் ஊற வைப்பது சிறந்தது அல்லது ஆழமான போஷாக்கு பெறுவதற்கு இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.
வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசி விட்டு, இறுதியாக கண்டிஷனர் பயன்படுத்தவும்.
சிறந்த முடிவுகளை பெறுவதற்கு இதனை வாரம் ஒரு முறை செய்வது பலன் தரும்.