6 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 6 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 03 கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, 03 கிலோகிராம் 944 கிராம் ஐஸ் போதைப்பொருள், 215 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 650,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.