போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம்; சந்திரிகா கைது
நாட்டின் பல பகுதிகளில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் களனி பகுதியில் வசிக்கும் சந்திரிகா என்ற 52 வயதுடையய பெண் என பொலிஸார் கூறியுள்ளனர். இதன்போது அவரிடமிருந்து 11 கிரோம் ஹெரோயின், 2.6 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கைதாவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, அவர் கிரிபத்கொடை, றாகம மற்றும் களனி பகுதிகளில் நீண்ட காலமாக ஹெராயின் விநியோகித்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கிரிபத்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.