சுற்றிவளைப்பில் சிக்கிய போதைப்பொருள் வலையமைப்பு ; நால்வர் கைது
அநுராதபுரம் விஜயபுர பகுதியில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் வியாபார வலையமைப்புடன், தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேரை போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் வலய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் விஜயபுர பகுதியில் 17 ஆம் திகதி புதன்கிழமை நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளதுடன், ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை அநுராதபுரம் வலய விசேட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் விஜயபுர மற்றும் நாகசேன மாவத்தை பகுதிகளை வசிப்பிடமாக கொண்ட 35,43,46 மற்றும் 48 வயதுடையவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நான்கு பேரும் அநுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த நகரங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பவர்கள் என்பதும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் இருந்து அம்பலமாகியுள்ளது.
மாணவியை கர்ப்பமாக்கிய 45 வயது நபருக்கு இறுதியில் ட்விஸ்ட் ; 02 மனைவிகள், 4 குழந்தைகள் இருக்கையில் அரங்கேறிய சம்பவம்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அநுராதபுரம் வலய விசேட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.