அம்பாறையில் வீட்டிற்குள் கைதான 'குடு அசங்க' ; அதிகாலையில் பொலிஸாரின் அதிரடி
அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த 'குடு அசங்க' எனப்படும் போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (26) சனிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரி
உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஏற்கனவே பிரதான போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 'குடு அசங்க' இரகசியமான முறையில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2050 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஒரு தொகை ரொக்கப் பணம் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த மேலும் மூவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.