நுவரெலியாவில் கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் தொழிற்சாலை
அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தி வந்ததற்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பு காவலில் உள்ள கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரால் இதற்காக 40 இலட்சம் ரூபாய்க்கும் அதிக நிதியை செலவிட்டுள்ளதாகவும், அதற்காக நுவரெலியா பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்றுள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
போதைப்பொருளை தயாரிப்பதற்காக அதற்கு தேவையான சுமார் 2,000 கிலோகிராம் இரசாயனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாகவும் சந்தேக நபர் விசாரணைகளின் போது கூறியுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.