ஆட்டோவுடன் சாரதி தீக்குளிப்பு; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
களுத்துறை - பண்டாரகமை, ஹத்தா கொட பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளித்த சம்பவத்தில் சாரதி பலத்த காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தகறாறு
இவ்வாறு தீக்குளித்தவர் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். இவர் குடும்பத் தகறாறு காரணமாக தீக்குளித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது சாரதியின் உடலில் பாரிய தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவரது ஆட்டோ முற்றாக தீக்கிரைகியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் ஹொரணை போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.