வெயில் காலத்துல ஜில்லுனு குளிர்பானங்களை குடிக்கலாமா?
வெயில் காலத்தில் வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் ஃபிரிட்ஜை திறந்து ஜில்லுனு எதாவது குடிச்சா தான் பெருமூச்சே விடுவோம். வெயில் அதிகமாக இருக்கும்போது ஜில்லென்று குளிர்பானங்கள் குடிப்பது சரியா?
கோடைகாலத்தில் அவ்வளவு ஜில்லென்று எந்த குளிர்ச்சியான பொருளையும் சாப்பிடக் கூடாது. அது தொண்டைக்கு மட்டும் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. வேறு சில உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
வேறு என்ன குடிக்கலாம்?
கோடை கால வெப்பத்தைத் தணித்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கக் குளிர் பானங்கள் தான் குடிக்க வேண்டும் என்று கிடையாது. அதற்கு பதிலாக இளநீர் குடிக்கலாம். அது உடலை அதிக குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
இளநீரில் இருக்கிற பொட்டாசியம், கால்சியம், சோடியம் ஆகியவை அதிகமாக இருப்பதால் உடல் வெப்பநிலையைத் தணிக்கிறது.
மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு இருக்கும்.
எனவே தேவையில்லாமல் குளிர் பானங்களைத் தேடிப் போக வேண்டிய தேவையில்லை.
ஐஸ் வாட்டர்
கோடை காலத்தில் குளிர் பானங்களைக் குடிக்கவே கூடாது. அப்படி எப்போதும் ஜில்லென்று தண்ணீரும், குளிர் பானங்களும் குடிக்கிற பழக்கம் இருந்தால் அதை முதலில் நிறுத்தி விடுவது நல்லது.
ஐஸ் வாட்டரில் உள்ள குளிர்ச்சி நம்முடைய உடலின் வெப்பத்தின் அளவை அதிகரிக்கச் செய்து, நிறைய உடல் நல உபாதைகளைக் கொடுக்கும்.
ஏற்படும் ஆபத்து
ஐஸ் வாட்டர் குடிப்பது, குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றால் குளிர்ச்சியான உணவுகள் நேரடியாக வயிற்றுக்குள் செல்லும் நிறைய உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன.
குளிர்ச்சியான உணவுகளில் இருக்கும் குளிர்ந்த தன்மை ரத்தக் குழாய்களில் சுருக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது உடலின் வெப்பத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.
ஜீரண சக்தியை கட்டுப்படுத்தும்;
நம்முடைய உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கொஞ்சம் வெயிலால் உடல் வெப்பம் அதிகரிக்கிறது என அதிக குளிர்ச்சியான பொருள்களைச் சாப்பிடும்போது நம்முடைய உடல் வெப்பநிலையைச் சமன்படுத்த நம்முடைய உடல் போராடிக் கொண்டிருக்கும்.
இதனால் நாம் உண்ணும் உணவுகள் ஜீரணிக்க மிக அதிக நேரம் பிடிக்கும்.