டீ அருந்துவதால் சருமம் கருமையாகுமா?
மக்கள் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக பருகும் பானம் டீ. ஆனால் டீ அதிகமாக பருகுவதால் வயிற்று வலி, தூக்கமின்மை மற்றும் சர்க்கரை நோய் போன்ற பல தீமைகள் ஏற்படுகின்றன.
டீ அருந்தக் கூடாதவர்கள்
குழந்தை பருவத்தில் இருப்பவர்கள் டீ அருந்தக்கூடாது என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இதில் காஃபின் உள்ளதால் அவர்களுக்கு இது தீங்கை ஏற்ப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
தேயிலையால் சருமத்தின் நிறம் கருப்பாக மாறும் என்று சிலர் கூறிவருகின்றனர். ஆனால் இதில் எவ்வித அறிவியல் சான்றுகளும் இல்லை என கூறப்படுத்திகிறது.
தோல் பராமரிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி தோலின் நிறம் உங்கள் மரபியல் வாழ்க்கை முறை வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் சருமத்தில் மெலனின் இருப்பதைப் பொறுத்தது என்று கூறுகின்றனர்.
அதிகளவான டீ அருந்துவதால் ஏற்படும் தீமைகள்
காஃபியை அருந்தி வருபவர்களுக்கு வயது முதிர்வு ஏற்படும் போது ஒருவித நடுக்கம் ஏற்படும். ஏனெனில் தேநீர் தூளிலும் காஃபைன் இருப்பதே அதன் காரணம் என கூறப்படுகின்றது.
இதனால் முடிந்தவரை டீயை அளவுடன் பருகுவதை பழக்கமாக்கிக் கொள்ள கூறப்படுகிறது.
அதேபோல் உடலில் பதற்றம், சோர்வு உணர்வு ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகளும் ஏற்படக்கூடும்.
தூக்கத்தை பாதிக்கும்
இயற்கையாகவே தேநீரில் காஃபைன் இருப்பதால் அதை அதிகளவில் உட்கொள்வது தூக்கத்தை பாதிக்கும் என கூறப்படுகின்றது.
நம் மூளைக்கு உறங்க வேண்டும் என்பதை உணர்த்துகிற ஹார்மோன் தான் மெலடோனின்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் காஃபின் மெலடோனின் செயல்பாட்டை தடுப்பது தெரியவந்துள்ளது.
மிதமிஞ்சிய அளவில் டீ குடிப்பது அல்லது வெறும் வயிற்றில் டீ அருந்துவது எதுக்களித்தல் பிரச்னையை உருவாக்கும்.
வயிற்றில் எரிச்சல்
இதனால் வயிற்றுள்ள அமிலத்தின் செயல்பாடு அதிகரித்து வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
நமது உடல் காஃபைனை எளிதாக உள்ளிழுத்துக்கொள்ளும். இதன்காரணமாக மூளையில் ஏதாவது பிரச்னை ஏற்படும்.
காஃபின் ஒரு தூண்டுதலாகக் கருதப்படாவிட்டாலும் அது மூளையில் சில செயல்பாட்டை தடுக்கிறது.
இதனால் மூளை கூடுதலாக டோபமைன் மற்றும் எண்டோர்பின்களை வெளியிட வழிவகுக்கும்.
தலைவலி
தேநீரில் காஃபைன் இருப்பதால் தலைவலியை ஏற்படுத்தும். ஒரு நாளில் பலமுறை டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், காஃபைன் இருப்பதன் காரணத்திற்காகவே தலைவலியை நீடித்து இருக்கும்.
அதிக டீ குடிப்பதால் காஃபின் மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களை சுருக்கி விடுகிறது. அதன்காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.