தண்ணீரை அளவுக்கு மீறி குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஒரு மனிதன் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியமானது. ஆனால் தண்ணீரையே அளவுக்கு மீறி குடித்தால் அது உடலுக்கு பல பிரச்னைகளை உருவாக்கும்.
தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து சருமத்துக்கும் பொலிவு சேர்க்கும். உடலுக்கு தேவையான அளவைவிட அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது சோடியம் அளவில் மாறுபாடு ஏற்பட்டு தேவையற்ற நீரை வெளியேற்ற உடல் சிரமப்படும்.
தினமும் 10 தடவைக்கு மேல் சிறுநீர் கழித்தால் அது நீரிழப்பு பிரச்னைக்கான அறிகுறியாகும்.
அதிகபடியான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள சோடியத்தின் அளவு குறைந்து செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மூளைக்கும் அழுத்தம் கொடுத்து தலைவலியை உண்டாக்கிவிடும் என்று கூறப்படுகிறது.
அதிகப்படியான நீர் பருகும்போது உதடுகள், கைகள், கால்களில் நிறமாற்றம் அல்லது வீக்கம் ஏற்பட வழிவகுத்துவிடும்.
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் தண்ணீர் பருகும் அளவை குறைக்க வேண்டும். உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தொடர்ந்து சிறுநீரகங்கள் அதிகப்படியான நீரை வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதன் செயல்பாடுகளில் பாதிப்பு நேரும். உடலும் சோர்வு ஏற்படும்.
அதிகளவில் தண்ணீர் பருகும்போது உடலில் உள்ள “எலக்ட்ரோலைட்டுகள்” வீழ்ச்சி அடையும். அதன் காரணமாக தசை பிடிப்பு பிரச்னை ஏற்படும்.
சிறுநீரகங்களால் அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் போகும்போது குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.