கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்
கறிவேப்பிலை நமது தினசரி உணவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு இலையாகும். இதன் மணமும் வினோதமான சுவையும் நம் அனைவரையும் கவர்கிறது.
இது பொதுவாக சாம்பார், ரசம், கலந்த சாதங்கள், துவையல் சட்னி என பலவகையான உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. ஆயுர்வேதத்தில் கறிவேப்பிலைக்கு அதிக மகத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் பல மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் இந்த இலைகள் ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகின்றன.
கறிவேப்பிலை தண்ணீர் நமக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. கறிவேப்பிலை நீரின் பல வித நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
எடை இழப்பு
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கறிவேப்பிலை நீரை எடை குறைக்கும் பானமாகவும் பயன்படுத்தலாம். இதனை குடிப்பது உடல் பருமனைக் குறைப்பது மட்டுமல்லாமல் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும் அதன் விளைவு சில நாட்களுக்குப் பிறகு தெரியும். அதுவரை இதை தொடர்ந்து குடித்து வர வேண்டும்.
சிறந்த செரிமானம்
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் மலமிளக்கிகள் உள்ளன. இது நம் வயிற்றின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும். கறிவேப்பிலை அல்லது கறிவேப்பிலை நீரை தொடர்ந்து உட்கொண்டால் வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மை நாம் காத்துக்கொள்லலாம்.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது
கறிவேப்பிலையை தினமும் பயன்படுத்தும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு (Sugar Level) சீராக இருக்கும். இதில் உள்ள ஃபிளாவனாய்டு உணவில் இருக்கும் ஸ்டார்சை குளுக்கோஸாக மாற்றும். இதனால் சர்க்கரை அளவை சமன்படுத்துவதில் உடலுக்கு உதவி கிடைக்கிறது. கறிவேப்பிலை இயற்கையாகவே இன்சுலின் உற்பத்தியின் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. அதிகப்படியான கொழுப்பின் அளவையும் இது சரி செய்கிறது.
உடலில் உள்ள நச்சுகளை நீக்கும்
கறிவேப்பிலை தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கப்படுகின்றது. இந்த இலைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், தோல் பிரச்சினைகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
மனநலம்
இன்றைய அவசர வாழ்க்கையில் நம்மைச் சுற்றி பல இறுக்கங்கள் உள்ளன. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சொந்த வாழ்வில் உள்ள பிரச்சனை, பிரிவு, துரோகம், பணிச்சுமை, பணப் பற்றாக்குறை, நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த மன உளைச்சல் ஏற்படலாம்.
கறிவேப்பிலை நீர் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும், இதில் உள்ள பண்புகள் மன சோர்வு மற்றும் உளைச்சலை அமைதிபடுத்தும் ஆற்றல் கொண்டவை.