அதிரடியாக குறைந்த தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நகை வாங்க காத்திருந்தோர் வாங்கலாமா வேண்டாமா என்கின்ற மனநிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.60 உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கவிலை நிலவரம்
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,735க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.45,880க்கு விற்பனையாகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 குறைந்து ஒரு கிராம் ரூ.4,726 ஆகவும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.37,528 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.78.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
