இறுதிப் போரில் பணியாற்றிய வைத்திய அதிகாரி வரதராஜா! மனைவி விடுத்த உருக்கமான கோரிக்கை
வன்னியில் இறுதிப் போரில் மக்களுடன் இறுதிவரை நின்று பணியாற்றிய வைத்தியர் வரதராஜா , கனடாவில் வசித்துவரும் நிலையில், தற்பூது கடுமையான உடல் நிலைப்பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர்ந்து கனடாவின் ரொறொன்டோவில் வசித்துவரும் வைத்தியர் வரதராஜா சில நாட்களுக்கு முன்னர் கடுமையான இருதயப் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரைக் காப்பாற்றும் முயற்சியில் வைத்தியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய கணவர், கடுமையான இருதயப் பிரச்சினையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்காக பிரார்த்திக்குமாறும் அவருடைய மனைவி முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.