வரதட்சணை கொடுமை... தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்; புதுமணப்பெண்கள் விபரீத முடிவு
தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால் அடுத்தடுத்து இடம்பெற்ற தற்கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4-வது நாளில் ஒருவர்- 78 நாட்களில் ஒருவர்
ஜூன் 27 ஆம் திகதி பெண்னுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்தபோது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தங்கம் விற்கும் விலையில் தங்கவீடு; சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை மின்னும் தங்கம்; வாயை பிளக்கும் இணையவாசிகள்!
இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டார் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் மீண்டுமொரு தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.