டக்ளஸ் தேவானந்தா மருத்துவமனையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
அதன்படி, அவர் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

டக்ளஸ் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம்
அதேசமயம் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்று பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கூறியுள்ளார்.
எனினும் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முறையாக சமர்பிக்கும் பட்சத்தில், அவற்றை ஆராயந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
டக்லஸின் ஸில் துப்பாக்கி தொடர்பில் திட்டமிட்ட குற்றக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் வழங்கிய தகவலுக்கு அமைய, டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை இராணுவத்தினால், டக்ளஸ் தேவானந்தாவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வெலிவேரிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைக்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.