பிரான்ஸில் இளைஞரை சுட்ட பொலிஸ்காரருக்கு குவியும் நன்கொடைகள்!
பிரான்ஸில் Nahel எனும் இளைஞன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பிரளயத்தை தோற்றுவித்துள்ள நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிக்கு நன்கொடைகள் குவிந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை Nanterre நகர காவல்துறை அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 17 வயதுடைய Nahel எனும் இளைஞன் கொல்லப்பட்டிருந்தான்.
நாடு முழுவதும் வன்முறைகள் கலவரங்கள்
இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்து, நாடு முழுவதும் இரவு நேர வன்முறைகள் கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினருக்கு நன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வரும் இந்த நன்கொடை சேகரிப்பில் இதுவரை €1,005,800 யூரோக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பரும் நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு கடும் கண்டனக்களை வெளியிட்டு வருகின்றனர்.