45 ஆண்டுகள்; கடைசி பாடல் என நினைக்கவில்லை; பாடும் நிலா குறித்து ரஜனி உருக்கம்
மறைந்த பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக பாடிய , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரஜினி, “எஸ்பிபி எனக்கு பாடும் கடைசி பாடல் இதுதான் என நான் கனவில் கூட நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில் ,
“45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என நெகிழ்ச்சியுடன் ரஜனி கூறியுள்ளார்.
இப்பாடல் வழக்கமான ரஜினி பாடலுக்கே உரித்தான வகையில் ஸ்டைலாக மாஸாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் பாடலிலேயே ‘அண்ணாத்த மாஸூக்கே பாஸூ’ என்று வரியும் வைத்துவிட்டார்கள்.