போலிப் பொலிசாரை அனுமதிக்காதீர்கள்
பொலிஸார் என தெரிவித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சீருடைய அணியாத நபர்களே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் அனுமதிக்காதீர்கள்
இவ்வாறு வரும் நபர்கள் பொலிஸார் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பொருட்கள், வாகனங்கள், வீடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்வது போன்று நடித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேசயம பொலிஸார் சோதனை அல்லது தேடுதல் நடவடிக்கையின் போது சீருடையில் காணப்படுவார்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் , தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாதவர்களை வீடுகளை சோதனையிடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.