ஆபத்து உள்ளது; ; அனர்த்த பிரதேசங்களுக்கு புதினம் பார்க்க செல்ல வேண்டாம்!
நாட்டில் அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களைப் பார்வையிட பொதுமக்கள் வருவதைத் தவிர்க்குமாறும், அது மிகவும் ஆபத்தானது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

நீரில் குளிப்பது , களியாட்டங்கள் தவிர்க்குமாறு கோரிக்கை
வெள்ள நீர் மிகவும் வேகமான நீரோட்டத்துடன் பாய்வதாகவும், அதனால் நீரில் குளிப்பதையும், களியாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
அதிக மழையுடனான வானிலையால் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
அதேவேளை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உடனடியாக அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள நிவாரணக் குழுக்கள் முன்னெடுக்கும் பணிகளைப் பாராட்டிய அவர், அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
மேலும் நிவாரணங்களை வழங்கும்போது மாவட்டச் செயலாளர் ஊடாக உரிய முறைமைக்கு அமைய அந்தச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு தெரிவித்தார்.